கணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுத்தது யார் தெரியுமா? நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை இழந்த கெளசல்யாவுக்கு சங்கரின் பாட்டி மாலை எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை பறிகொடுத்து நின்ற கெள்சல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல பணிகளைச் செய்து வருகிறார்.

இதையடுத்து கெளசல்யா இன்று கோயமுத்தூரில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார்.

இதற்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களும், ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திருமணத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது, அதாவது சங்கரின் பாட்டியும் மற்றும் தந்தையுமான வேலுச்சாமி முன்னிலையில் தான் இந்த திருமணம் நடைபெற்றது.

அப்போது ங்கரின் பாட்டி, மாலை எடுத்துக் கொடுக்க, அதை சக்தியும் கவுசல்யாவும் வாங்கி மாலை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட சங்கரின் குடும்பத்தினர் ஆணந்த கண்ணீர்விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்