வீடு திரும்பாமல் அவதிப்படும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்கள்

Report Print Gokulan Gokulan in இந்தியா

சபரிமலையில் சென்று திரும்பிய இரு பெண்கள் இன்னும் வீடு திரும்பாமல் பாதுகாப்பு வளையத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா சபரிமலையில் சில நாட்களுக்கு முன் கோவிலில் சாமி தரிசனம் செய்த இரு பெண்களான பிந்து மற்றும் கனகதுர்கள் இருவரும். பாதுகாப்பிற்காக இன்று வீட்டிற்கு அனுப்பபடாமல் உள்ளனர். இவர்கள் இருவரும் கொச்சிக்கு வெளிபகுதியில் ரகசிய இடத்தில் தங்க வகைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்று அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாதுகாப்பு கருதி நாங்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்

மேலும் நாங்கள் கோவிலுக்கு சென்ற போது மிகவும் ஆபத்து ஏற்படுத்தும் என்று திரும்பி செல்லும் படி பொலீசார், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எங்களிடம் அறிவுறுத்தினர்.

ஆனால், அப்போது எங்களுக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் பொலீசாரையும், அரசையும், கேரள ஜனநாயக சமுதாய அமைப்பையும் நம்புகிறோம் . விரைவில் வீடு திரும்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்