தமிழர்கள் 7 பேரின் விடுதலைக்காக திருமண மேடையில் மணப்பெண்-மணமகன் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி, மணமக்கள் பாதைகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை வைத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இரா.மணிவண்ணன். இவர் மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் வினோதினி என்ற பெண்ணிற்கு இன்று திண்டுக்கலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அப்போது மணமக்கள் மணிவண்ணன்-வினோதினி ஆகியோர் மணமேடையில் 7 தமிழர்களை விடுலை செய், சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடு என்ற பதாதையை ஏந்தி ஏழு தமிழர்களையும் விடுலை செய் என வலியுறுத்தியுள்ளனர்.

மணமக்களை வாழ்த்த வருகை தந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மே பதினேழு இயக்கத்தினரும் அந்த பதாகையை ஏந்தியிருந்தனர்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் நீண்ட நாட்களாக ஏழு தமிழரை விடுவிக்க பல்வேறு போராட்டங்களின் மூலம் வலியுறுத்தி வருகின்ற நிலையில் திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் இந்த பாதையை ஏந்தியிருப்பது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்