25 ஆயித்திற்கு பதிலாக ஒரு ரூபாய்யுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபர்... இரு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு பெற்றுள்ளாராம்...!

Report Print Abisha in இந்தியா

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஒருரூபாயுடன் தன் வேட்புமனுவை தாக்கல் செய்யவந்த நபர் திருப்பிஅனுப்பப்பட்டார்

சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் அலுவலரைச் சந்தித்து தன் வேட்புமனுவைக் கொடுத்தார். அந்த மனுவை வாங்கிக் கொண்ட தேர்தல் அலுவலர் டெபாசிட் தொகை 25,000 கேட்டதற்கு தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் பணத்தை அந்த நபர் தேர்தல் அதிகரியிடம்வழங்கினார். இதனை மறுத்த அதிகாரி அந்த ஒரு ரூபாய் அவரிடமே திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

வெளியே வந்த அந்த நபர் பேசியது, என் பெயர் அப்துல் வாஹித். நான், சேலம் மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்யூட்டர் முடித்திருக்கிறேன். 2014 சேலம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 ஓமலூர் சட்டமன்றத் தேர்தலும் போட்டியிட்டு மூன்றிலக்க எண்ணிக்கையில் ஓட்டுகள் வாங்கியிருக்கிறேன். கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்களில் ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தேன். வேட்புமனு பரிசீலணையின் போது என் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலம்,இன்று ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். ஆனால், என் மனு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தவறானது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்