உனது மனைவியுடன் எனக்கு பாலியல் உறவு இருக்கிறது: ராணுவ வீரரை தற்கொலைக்கு தூண்டிய மனைவியும் காதலனும்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில் மனைவியும் அவரது முன்னாள் காதலனும் இருப்பது அம்பலமாகியுள்ளது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி குஜராத்தின் ஜாம்நகர் ராணுவ முகாமில் வைத்து தமது துப்பாக்கியாலையே தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், திருவனந்தபுரம் காவல்துறை தலைமை அலுவலக ஊழியரான 26 வயது அமிதாப் என்பவரை கைது செய்தனர்.

மட்டுமின்றி அவரது காதலி அஞ்சனாவையும் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ராணுவ வீரர் வைஷாக் என்பவரின் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில வாரங்களில் பணி நிமித்தம் அவர் குஜராத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் கணவர் அருகில் இல்லாததால், முன்னாள் காதலன் அமிதாபுடன் அஞ்சனா நெருக்கமாக பழகத்துடங்கியுள்ளார்.

மட்டுமின்றி அஞ்சனாவுடன் தாம் மீண்டும் நெருக்கமாக பழகி வருவதை குஜராத்தில் இருக்கும் வைஷாகிடம் தொலைபேசியில் அமிதாப் தெரிவித்துள்ளார்.

அதில், தாம் அமிதாப் எனவும், உனது மனைவியின் காதலன் எனவும், நாங்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இனி நீ ஊருக்கு வரும்போது கொஞ்சுவது உனது பிள்ளையை அல்ல, அது எனது பிள்ளை என்பதை மறவாதே எனவும் வக்கிரமாக பேசியுள்ளார்.

ஆனால் இந்த வார்த்தைகள் ராணுவ வீரரான வைஷாகை உலுக்கியுள்ளது. மனதளவில் தடுமாறிய வைஷாக், மனைவி தம்மை ஏமாற்றியதை அறிந்தே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைஷாக் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், குறித்த சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு தமது சகோதரருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

இதுவே தற்போது பொலிசாருக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. வைஷாக் பணி நிமித்தம் குஜராத் சென்ற நிலையில், அஞ்சனா அவரது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி அமிதாப்பின் தேவைக்காக தங்க நகைகளும் அஞ்சனா வழங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி அமிதாப் இதுபோன்று பல இளம்பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளதும், அதில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதும் தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்