கொழும்பு குண்டுவெடிப்பில் கேரள பெண் உயிரிழப்பு: கணவரை வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தபோது நடந்த சோகம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் கேரளாவைச் சேர்ந்த ரஷியான என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது கணவரை துபாய்க்கு வழியனுப்ப வந்த இவர் கொழும்பில் ஹொட்டலில் தங்கி இருந்த போது குண்டுவெடித்து உயிரிழந்தார்.

இந்த கொடூர தாக்குதல்களில் 6 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக இருக்கலாம் என்று இலங்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்