வாக்குப்பதிவு மையத்தில் மூன்று கட்சியினருக்கு இடையே அடிதடி மோதல்!

Report Print Vijay Amburore in இந்தியா

மேற்கு வாங்க மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியினர் உள்ளே நுழைய முயன்றதால் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் மக்க‌ளவை தேர்தலானது,‌ இதுவரை ‌302‌ தொகுதிகளில் 3‌ கட்ட‌ங்களாக நடந்து முடிந்துள்ளது. 4-ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 125-ல், பாதுகாப்பு படையினர் குறைவாக இருந்ததாக தெரிகிறது.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், அங்கிருந்த வாக்காளர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதற்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு அடிதடி ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை உணர்ந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக தடியடி நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்