பெட்டி கடையில் கைகலப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி தீடீரென துப்பாக்கிச் சூடு

Report Print Gokulan Gokulan in இந்தியா

நாகப்பட்டினத்தில் பெட்டி கடையில் கைகலப்பில் ஈடுப்பட்ட ஆயுதப்படை பொலிஸ் அதிகாரி ஒருவர் தீடீரென தனது கைதுப்பாக்கியை எடுத்து சூட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஜெத்தன் ராஜா என்ற பொலிஸ் அதிகாரியே இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெத்தன் ராஜா ஞாயிறு இரவு பணி முடிந்து தனது அறைக்கு செல்லும் வழியில் பொருட்கள் வாங்க பெட்டி கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் அப்பகுதி வாசியான மதிவாணன் என்பவருடன் ராஜா பேசியுள்ளார். பேச்சு வாக்குவதமாக மாற இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜா தனது கைதுப்பாக்கியை எடுத்து மதிவாணனை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி சூட்டுள்ளார்.

பின்னர் மதிவாணனின் கால்களை குறிவைத்து சூட்டுள்ளார். இதில் மதிவாணனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் அருகிலிருந்த 41 வயதுடைய செல்வராஜ் மற்றும் 46 வயதுடைய மதி ஆகிய இருவர் கால்களில் துப்பாக்கி புல்லட்டால் காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெத்தன் ராஜாவிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த பொலிசார் துப்பாக்சிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்