அவள் அழகு தான்! இளம் திருநங்கையை உயிராக காதலித்த இளைஞர்... இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இரண்டு இளைஞர்கள் இரண்டு திருநங்கைகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கேயார் சவுகான் (20). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

சவுகான் ஆட்டோவில் சில மாதங்களுக்கு முன்னர் பயலி என்ற திருநங்கை பயணம் செய்தார். அப்போது இருவரும் நண்பர்கள் ஆனார்கள், பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து தனது வீட்டில் இது குறித்து சவுகான் கூறினார். ஆனால் திருநங்கையை சவுகான் திருமணம் செய்வதை அவர் குடும்பத்தார் விரும்பாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருநங்கையாக இருந்தாலும் அவர் எனக்கு அழகு தான் என கூறிய சவுகான், பயலியை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி கடந்த மாதம் 31ஆம் திகதி சவுகான் பயலியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இது குறித்து தனது குடும்பத்தாரிடம் சொன்னார். முதலில் இதை ஏற்காத குடும்பத்தார் தற்போது இருவரையும் ஏற்று கொண்டார்கள்.

இது குறித்து திருநங்கை பயலி கூறுகையில், நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. என் கணவரின் தாய் தற்போது என்னுடன் சகஜமாக பேசுகிறார் என கூறியுள்ளார்.

இதே போல ரத்வா (30) என்ற நபர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியை காண சில மாதங்களுக்கு முன்னர் சென்றார்.

அப்போது அங்கு பணிபுரிந்த ரீனா என்ற திருநங்கையை பார்த்த உடனேயே ரத்வாவுக்கு பிடித்து விட்டது.

இதையடுத்து அவரை பார்ப்பதற்காகவே அடிக்கடி சர்க்கஸுக்கு ரத்வா சென்றார்.

பின்னர் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ரீனா மற்றும் ரத்வாவை பேச வைத்தார்.

இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கினர், பின்னர் இது குறித்து ரத்வா தனது குடும்பத்தாரிடம் சொன்ன போது முதலில் ஏற்கவில்லை.

பின்னர் சமாதானம் அடைந்த குடும்பத்தார் ரத்வா திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க ரத்வா - ரீனா திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers