தேர்தல் தேவதைகள்: தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த புகழ்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்ட இரண்டு பெண்கள், அகில இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் தேர்தல் தேவதைகளாகப் பிரபலமாகியுள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல்பெண் பணியாளர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்கிறார்.

போபால் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் என்பவருக்கும் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்குக்கும் இடையே கடும் போட்டி நடந்தது.

இந்தியாவே இந்த தொகுதியின் முடிவினை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. இந்த இரு போட்டியாளர்களுக்கு இணையாக தேர்தல் பெண் அலுவலர் ஊடகங்களில் இடம் பிடித்துள்ளார்.

போபால் நகரின் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் யோகேஷ்வரி கோகித் என்ற பெண் அதிகாரி தேர்தல் பணியாற்றினார்.

யோகேஷ்வரி கோகித் கனரா வங்கியில் பணியாற்றுபவர். யோகேஷ்வரி கோகித் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நடந்து வந்த புகைப்படம்தான் சமூக வலைதளத்தில் அதகளமாகியிருக்கிறது.

இந்தப் பெண்ணுடன் அவர் அணிந்திருந்த நீல நிற உடையும் பிரபலமாகியுள்ளது.

யோகேஷ்வரி கோகித் வரிசையில் வரும் இன்னொரு பெண்மணி ரீனா திவேதி. ரீனா ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவர். உத்திர பிரதேச அரசுப் பணியாளர் ரீனா. பொது மராமத்து துறையில் இளநிலை உதவியாளராகப் பணி புரிகிறார்.

லக்னோ வாக்குச்சாவடி ஒன்றில் ரீனாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. ரீனா வாக்குப் பதிவு எந்திரத்தை தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்