மகளின் திருமண வரவேற்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

புதுச்சேரி மாநிலத்தில் மணப்பெண்ணின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வரவேற்பு நிகழ்வு அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் பங்கேற்பதற்காக பிரேமா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பூட்டிய வீடு திறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோல் உடைக்கப்பட்டு உள்ளிருந்த 3.50 பவுன் தங்க நகை, மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்