உயிரை பணயம் வச்சு வந்தேன்... விரக்தியில் திருடன் எழுதி வைத்த கடிதம்

Report Print Vijay Amburore in இந்தியா
140Shares

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கல்லாவில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் கடையின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை ஒன்றினை நடத்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடிவிட்டு இன்று அதிகாலை கடையை திறந்துள்ளார்.

அப்போது உள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. மேற்பக்க கூரை உடைக்கப்பட்டிருந்துள்ளது.

நள்ளிரவில் கடையின் கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே குதித்த திருடன் கல்லாவில் பணம் இல்லாததை பார்த்து ஏமாற்றமடைந்துள்ளான்.

உடனே கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, "உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை" என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான்.

இதனை பார்த்து அதிச்சியடைந்த ஜெயராஜ் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்