மனைவியை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய சென்றாயன்! அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சென்றாயன் என்பவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவருக்கும் வரலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த அடுத்த மாதத்தில் இருந்து மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தினார் சென்றாயன்.

மேலும் இரவு நேரங்களில் தினமும் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து தனது வீட்டுக்கு சென்று அழுதுபுலம்பி கணவரின் செயல் குறித்து வரலட்சுமி கூறினார்.

பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்றாயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரலட்சுமியை சேர்த்து வைத்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்த சென்றாயன் சடலத்தை கிணற்றில் தூக்கிபோட்டு விட்டு தற்கொலை நாடகம் ஆடினார்.

ஆனால் வரலட்சுமியின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்த நிலையில் பொலிசில் புகார் அளித்தனர்.

இதை தெரிந்து கொண்ட சென்றாயன் தலைமறைவானார்.

இதையடுத்து வரலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் சென்றாயனை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers