ஐஃபா விருது விழாவில் கலந்துக்கொண்டு பேட்டியளித்த நாய்: மக்களின் இதயத்தை கவர்ந்த வீடியோ

Report Print Basu in இந்தியா

மும்பையில் நடைபெற்ற 20வது ஐஃபா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு நாய் பேட்டியளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி மக்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளான ஐஃபா 2019 சமீபத்தில் முடிவடைந்தது. இதில், கலந்துக்கொண்ட நடிகை, நடிகர்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகை அதிதி பாட்டியா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி மக்களின் இதயங்களை வென்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் நடிகை அதிதி பாட்டியா பகிர்ந்த வீடியோவில், ஒரு நாய் பேட்டி கொடுக்கிறது. நடிகை பேட்டி எடுப்பவரைப் போல நாயுடன் பேசுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐந்து அறிவுள்ள உயிரினம் உட்கார்ந்து அவர் பேசுவதை கவனமாகக் கேட்கிறது.

பின்னர், இரண்டு மனிதர்கள் சந்திக்கும் போது கை கொடுப்பது போல், நாய் நடிகையிடம் தனது காலை கொடுக்கிறது.

View this post on Instagram

Spread love! 🐶❤️

A post shared by Aditi Bhatia 🎭 (@aditi_bhatia4) on

2 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .மேலும், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். வீடியோவை சிலர் பாராட்டியும், விமர்சித்தும் ஒரு கலவையான கருத்துகளை மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்