எனக்கு இஸ்லாமியர் கார் டிரைவரா? உபர் நிறுவனத்தில் புக் செய்த பெண் செய்த திடீர் செயல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவர் கார் டிரைவர் என்பதால், புக் செய்த காரை பெண் ஒருவர் ரத்து செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரின் டுவிட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று தனியார் நிறுவனமான உபர் நிறுவனத்தின் பக்கத்தில் கார் முன் பதிவு செய்துள்ளார்.

அதன் படி அவர் புக் செய்த காரின் டிரைவர் இஸ்லாமியர் என்பதை அந்த பெண் உடனடியாக காரின் முன்பதிவை ரத்து செய்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன் என்று உபர் நிறுவனத்திற்கு டேக் செய்துள்ளார்.

அதைக் கண்ட உபர் நிறுவனம், இந்தப் பிரச்னையை நாங்கள் நிச்சயமாக தீர்க்க விரும்புகிறோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைப்பேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது

தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்