பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக இறந்த 3 வயது குழந்தை... நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது மகன் பெற்றோர் கண்முன்னே இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், அபிமன்யு என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கோபால் இன்று தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, அதன் பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது கொருக்கு பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்ற போது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபின்மன்யுவின் கழுத்தில் வெட்டியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோபால் மற்றும் அவரது மனைவி உடனடியாக மகனை அருகில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள், சிறுவன ஏற்கனவே இறந்துவிட்டதாக கூற, தங்கள் கண்முன்னே மகனை பறிகொடுத்துவிட்டோமே என்று அவர்கள் இருவரும் கண்ணீர்விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஞ்சா நூலால் வடசென்னை பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து, தமிழக அரசு காத்தாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்