நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் திகார் சிறைக்கு மாற்றம் - தூக்கிலிடும் நேரம் நெருங்கிவிட்டது?

Report Print Abisha in இந்தியா

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேரும் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தெலுங்கான பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது.

அந்த வகையில், உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிரான தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்ற பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திகார் சிறையின் மூத்த அதிகாரி பவன் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகேஷ் சிங், வினேய் சர்மா, அக்ஷை ஆகியோர் திகார் சிறை இரண்டில் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நான்கு குற்றவாளிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்ற குற்றவாளிகளால் தீங்கு நேராலாம் என்பதற்காக அவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்ற அதிகாரிகள், இது பாதுகாப்பு நடவடிக்கை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், கருணை மனு நிராகரிக்கப்பட்டபின் கைதிகள் வைக்கப்படும் திகார் சிறைபிரிவின் பராமரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், அங்கு தூக்கிலிட ஆட்கள் இல்லை என்றால் நாட்டின் ஏதேனும் பகுதியில் இருந்து ஆட்கள் அழைத்துவரப்படுவார்கள்.

முன்னதாக பக்சர் சிறையில், தூக்கிடும் கயிறுகள் தயாரிக்கும் பணிகள் துங்கிவிட்டதாகவும் அங்குள்ள அதிகரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இத்தகைய தாயர் நிலைகள் அனைத்தும், விரைவில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காகவே என்று யூகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்