3 வருடங்களாக ஒரு குடும்பமே கழிப்பறையில் வாழ்க்கையை நடத்தி வரும் கொடூரம்

Report Print Vijay Amburore in இந்தியா

72 வயதான மூதாட்டி ஒருவர் மூன்று வருடங்களாக, தன்னுடைய குடும்பத்துடன் கழிப்பையில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டிருபாதி பெஹ்ரா என்கிற 72 வயது மூதாட்டி தன்னுடைய மகள், பேரன் உள்ளிட்ட மொத்த குடும்பத்துடன் 3 வருடங்களுக்கும் மேலாக கழிப்பறையில் வசித்து வருகிறார்.

சமையல் செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்ளில் கழிப்பறையில் உறங்குவதாக கூறியுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் அந்த கழிப்பறை கிராம நிர்வாக அதிகாரிகளால் கட்டபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மூதாட்டி ஏற்கனவே, அதிகாரிகளிடம் முறையிட்ட போது வீடு கட்டித்தருவதாக அவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஆனால் இன்றுவரை கட்டித்தரப்படவில்லை எனவும், அதற்காக காத்திருப்பதாகவும் பெஹ்ரா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்