10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து சடலத்தை 3வது மாடியில் இருந்து வீசிய இளைஞன்! கொடூரனின் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா
939Shares

சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கேட்டுக்குப்பத்தில் உள்ள 10 வயது சிறுமியை சுரேஷ் என்ற 29 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை கொலை செய்த கொடூரன் சுரேஷ் சடலத்தை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றினார்கள்.

பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து குற்றவாளி சுரேஷை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்