‘நாங்கள் வீட்டிற்கு போக வேண்டும்’..! மருத்துவர்களிடம் பிரச்சினை செய்த கொரோனா பாதித்த நபர்கள்!

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் ஜபல்பூரில் மிகவும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நன்கு படித்தவர்கள் என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அவர்களுக்கு ஏற்றாற் போல் வசிதி இல்லாததால் வீட்டில் தங்க விரும்புவதாக மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் நடத்தை நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை மிகவும் சுகாதாரமாக நன்றாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்