கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கிய ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தமிழர் ரவிச்சந்திரன்

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5,000-ஐ நிதியாக வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்த, நிதி உதவி செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் அனைவருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வந்தனர்.

அந்தவகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் 5,000 ரூபாயை அவரது வழக்கறிஞர்கள் திருமுருகன், முத்து ஆகியோர் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நேற்று வழங்கியுள்ளார்.

சிறைவாசிகள் சிறையில் செய்யும் பணிகளுக்கு அவர்களுக்கு ஊதியம் உண்டு. அந்த வகையில் தனக்குக் கிடைத்த ஒரு பங்குத் தொகையில் சேமித்த பணத்தில் இருந்து இத்தொகையை ரவிச்சந்திரன் அளித்துள்ளார்.

ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலை. அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக இவர் நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்