இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

மூளையில் ஏற்பட்ட கட்டியின் அறுவைசிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10ம் திகதி அறுவை சிகிச்சை நடந்த நிலையில், பரிசோதனையின் போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், கோமா நிலைக்கு சென்ற அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ராணுவ மருத்துவமனை கூறியது.

இந்நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இத்தகவலை அவரது மகனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்