5 வயது சிறுமியை கொன்ற 11 வயது சிறுவன்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் 5 வயது சிறுமியை கல்லைத் தூக்கி போட்டு 11 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் இச்சம்பவம் நடந்ததாக தெரிகிறது, செல்போனில் விளையாடிய போது சிறுவனை சிறுமி வீழ்த்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கியுள்ளான், இதில் ரத்த வெள்ளத்தில் சிறுமி உயிரிழந்தாள்.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிசார், விசாரித்ததில் அவனது செல்லப்பிராணியை (எலி) கொன்று விட்டதாகவும் அதனாலேயே அவளை கொன்றுவிட்டதாகக் கூறியுள்ளனான்.

சிறுமியின் உடலைக் கைப்பற்றிய லாசுடியா நகர் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்