மணப்பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவரை மணந்த மாப்பிள்ளை! திருமணமான 10 நாளில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ரோஷினி என்ற அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சில நபர்கள் மூலம் ரோஷினியை பற்றி தெரிந்து கொண்ட நிலையிலேயே இந்த திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு 70 ஆயிரம் ரொக்கம், நகைகள் மற்றும் துணிகளை திலீப் கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்த போது ரோஷினி காணாமல் போனதை கண்டு திலீப் அதிர்ச்சியடைந்தார்.

மேலும் வீட்டிலிருந்த பணம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்பிலான நகைகளும் காணாமல் போனது.

இது குறித்து திலீப் பொலிசில் புகார் கொடுத்தார், விசாரணையில் ரோஷினி பணம், நகைகளுடன் சொந்த ஊருக்கு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டது.

மேலும் ரோஷினியின் உறவினர்களான கலாபாய், ஷிட்டால் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்