டாக்டர் வீட்டில் பணியாற்றிய வேலைக்கார இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! உடலில் இருந்த நகக்கீறல்கள்.. அம்பலமான நாடகம்

Report Print Raju Raju in இந்தியா
1030Shares

சென்னையில் சம்பள பாக்கி வாங்க வந்த வேலைக்கார பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்த 27 வயது பெண், டாக்டர் தீபக் (28) என்பவர் வீட்டில் கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி வேலையில் இருந்து நின்றார்.

இதற்கிடையே தான் வேலை பார்த்த 18 நாள் சம்பளத்தை வாங்கலாம் என்று நினைத்து நேற்று வீட்டு உரிமையாளரான டாக்டர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த டாக்டர் தீபக் மற்றும் அவருடைய உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் (35) ஆகிய இருவரும் அந்த பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்று அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சுமார் 4 மணி நேரமாக அறையில் அடைத்து வைத்துவிட்டு, நீ ஆசைக்கு இணங்காவிட்டால் நகையை திருடியதாக பொலிசில் பிடித்து கொடுத்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் ஆசைக்கு அடிபணியாமல் அவர்களை எதிர்த்து போராடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர், தனது வீட்டில் வேலை செய்த பெண் நகையை திருடி விட்டார் என்றும், அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பொலிசார் அங்கு வந்து விசாரணைக்கு மூவரையும் அழைத்து சென்றனர்.

அப்போது பெண்ணின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததாலும், அவரின் ஆடைகள் கிழிந்து இருந்ததாலும் சந்தேகம் அடைந்த பொலிசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது சம்பள பாக்கி தருவதாக கூறி டாக்டரும், அவரது நண்பரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தான் அடிபணியாததால் நகை திருடியதாக பொய் புகார் கூறியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொலிசார் டாக்டர் தீபக் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் இருவரிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் மீது தவறு இருப்பதும் முதலில் திருட்டு நாடகம் நடத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீபக் மற்றும் ஆனந்த் அமிர்தராஜை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்