ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் விஜயகாந்தின் மகன்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை.
தற்போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என கூறியுள்ளார்.