ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை! மனைவி-மகனுடன் தூக்கில் தொங்கிய ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி

Report Print Santhan in இந்தியா
0Shares

இந்தியாவில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாங்கிலி மாவட்டம் பேலங்கி கிராமத்தை சேர்ந்தவர் அன்னாசோ காவனே (65). இவர் புனேயில் பொலிசாராக வேலை செய்து பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு மனைவி மலன் (50), மகன் முகேஷ் இருந்தனர். நேற்று அவரது வீட்டில் யாரும் வெளியே நடமாடவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, அன்னாசோ காவனே, மனைவி மலன், மகன் முகேஷ் ஆகிய 3 பேர் தூக்கு கயிற்றில் சடலமாக தொங்கி கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு புகார் தெரிவிக்க, உடனடியாக பொலிசார் அங்கு சென்று அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், , மகன் முகேஷ் பங்குசந்தையில் செய்த முதலீடு பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதனால் மனமுடைந்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.

இருப்பினும் அவர்களின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்