தகவல்கள் திருட்டு வழக்கு: இழப்பீடு வழங்க முடியாது என பேஸ்புக் அறிவிப்பு

Report Print Kabilan in இன்ரர்நெட்

பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்க்கு ஆதரவாக பேஸ்புக் சமூக வலைதளத்திலிருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டன.

அதன்மூலம், மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கு ஏற்ப பிரச்சாரத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த Cambridge Analytica நிறுவனம் மேற்கொண்டது. இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு, அதற்கு மன்னிப்பும் கோரினார்.

மேலும், இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார். அதன் பின்னர், அவரது விளக்கத்தில் சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறுகையில், ‘தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான். இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை.

ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shawn Thew/EPA

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...