உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Nokia 2.3 Android One

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

நோக்கியா நிறுவனம் பட்ஜட் விலையில் புதிய அன்ரோயிட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Nokia 2.3 Android One எனும் இக் கைப்பேசியானது 6.2 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இக் கைப்பேசியில் MediaTek Helio A22 processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள் என்பனவும் காணப்படுகின்றன.

எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்