இந்த வருடமும் இந்த ஐந்து ராசிக்காரர்களும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள்! இதில் உங்க ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை
611Shares

ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சில ராசிகள் இந்த வருடமும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த வருடம் சிங்கிளாகவே இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்

இந்த வருடம் காதலில் இருந்து விலகி இருக்கப்போகும் முதல் ராசி மிதுனம்தான். உங்கள் வாழக்கையில் அடுத்தடுத்த நகர்வுகள் வந்து கொண்டே இருக்கும், நீங்கள் எதை நோக்கி செல்கிறீர்கள் என்பதே உங்களுக்கேத் தெரியாது.

உங்கள் மூளையும், மனதும் எப்போதும் குழப்பங்களால் நிறைந்திருக்கும். எனவே நீங்கள் தொடங்கும் எந்த வேலையாக இருந்தாலும் தவறான திசையில் செல்லும். இது உங்களுக்கு உணர்த்துவது ஒன்றுதான்.

எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு இது சரியான தருணம் அல்ல. உங்கள் முன்னாள் காதலர்கள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வர வாய்ப்புகள் உள்ளது.

விலகிய ஒருவரை மீண்டும் வாழ்க்கையில் அனுமதிக்க அவசரப்படதீர்கள். மொத்தத்தில் இந்த வருடம் நீங்கள் காதல் விஷயத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தங்களின் சொந்த நலனுக்காக இந்த வருடம் காதல் விவகாரத்தில் இருந்து விலகி இருந்தே ஆக வேண்டும்.

நீங்கள் சமீபத்தில் பல மாற்றங்களை சந்தித்து இருப்பீர்கள், நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் இன்னும் அந்த கனமான நினைவுகளை நீங்கள் சுமந்து கொண்டுதான் இருப்பீர்கள். அது அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு விலகாது.

ஒரு உறவில் இருந்து இன்னொரு உறவிற்கு மாறுவதற்கு பதில் இந்த ஆண்டை சில ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது.

நிச்சயமாக, மீளக்கூடிய உறவுகள் முதலில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தோன்றும், ஆனால் பின்னர், அவை உங்களுக்கும் மற்ற நபருக்கும் தேவையற்ற காயங்களைக் கொடுக்கும்.

எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் உங்களின் தேவை என்ன என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டிய காலமிது.

உங்கள் இதயத்தையும், உள்ளுணர்வையும் கேட்டு உங்களுக்கு எது தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.

கடகம்

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர், எனவே நீங்கள் தாங்கும் அளவை விட உங்களின் இதயம் அதிக காயமடையும். எனவே காயமடைந்த இதயத்தை குணப்படுத்தும் வழிகளில் நீங்கள் இந்த வருடத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டிய நேரமிது, துக்கப்படுவதில் வெட்கம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களை பலவீனமாகக் கருதுவதற்குப் பதிலாக, உங்கள் உணர்ச்சிகளுடன் தொடர்பில் இருங்கள், உங்கள் உண்மையான பலத்தை அடையாளம் காணுங்கள்.

தன்னை காயப்படுத்தும் விஷயங்களைக் கொண்டே தன்னை பலப்படுத்திக் கொள்ளும் திறன் அனைவருக்கும் இருக்காது, அதிர்ஷ்டவசமாக நீங்கள் அந்த பரிசைப் பெற்றவர்கள்.

கன்னி

அனைவருடனும் சமரசம் செய்து கொள்ள நீங்கள் உங்களால் முடிந்தளவு முயற்சி செய்து விட்டீர்கள், இதற்கு மேலும் அதனை செய்ய வேண்டாம், அனைவரையும் எதிர்கொள்ள வேண்டிய நேரமிது.

மற்றவர்களின் தேவைகளை அறிந்து அதனை உங்களின் தேவைகளாக நினைத்து அதனை நிறைவேற்றிய காலம் எல்லாம் கடந்து விட்டது.

இவை எதுவும் இல்லாமல் உங்களுக்காக நீங்கள் வாழ வேண்டிய காலம் வந்துவிட்டது. மற்றவர்களை சிறந்தவர்களாக மாற்றுவதில் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடுவதை நிறுத்தி உங்களின் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

விருச்சிகம்

காதலில் இருந்து விலகி இந்த வருடம் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறவர்களில் விருச்சிக ராசிக்காரர்களும் ஒருவர். காதலுக்கும், காமத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வாழ்க்கையில் புதிதாக நுழைபவரிடம் நீங்கள் எவ்வளவு ஈர்க்கப்படுகிறீர்களோ அதேயளவு உங்களின் உள்ளுணர்வு சொல்வதையும் கேளுங்கள்.

விஷயங்களை விரைந்து முடிப்பதற்கு பதிலாக நிதானமாக செயல்படுங்கள்.

உடனடியாக காதலில் இறங்காவிட்டால் உங்களுக்கான சரியான துணையை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று பயப்படவேண்டாம். உங்களுக்கென பிறந்தவர் உங்களை விட்டு எங்கேயும் சென்றுவிட மாட்டார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்