என் குழந்தையின் உடலில் ஓடுவது அரச இரத்தம்: அடித்து கூறும் மொடல் அழகி

Report Print Vijay Amburore in மலேசியா

மலேசியாவின் முன்னாள் மன்னரால் விவாகரத்து செய்யப்பட்ட ரஷ்ய அழகி தனது குழந்தையின் உடலில் அரச ரத்தம் இருப்பதாக கூறியுள்ளார்.

ரஷ்ய மொடல் அழகி ஒக்ஸானா வீவோடினா, ஆண் ஒருவருடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மலேசியாவின் முன்னாள் மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது அவரை விவாகரத்து செய்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது வேறு ஒரு பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்வதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

ஷரியா சட்டத்தின் கீழ் ஒக்ஸானாவை ராயல் விவாகரத்து செய்ததாக முன்னாள் ராஜாவின் வழக்கறிஞர் அறிவித்ததை அடுத்து குழந்தையின் தந்தை குறித்து கேள்விகள் சமூக ஊடங்கங்களில் எழுந்தன.

ஒக்ஸானாவின் குழந்தை மகன் உண்மையில் ராஜாவின் குழந்தையா என்று கேட்கப்பட்டதோடு, ஏன் அவர் எப்போதும் குழந்தையின் முகத்தை தனது சமூக ஊடக கணக்கில் மறைத்து வெளியிடுகிறார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒக்ஸானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது அவருடைய குழந்தை இல்லையென்றால், இனி எந்த கணக்கையும் திறக்க மாட்டேன். என் வாழ்க்கையை பற்றி வெளியில் சொல்வதற்கு நான் வெட்கப்படுவேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய மகன் குறித்த பதிவில், என்னுடைய மகன் மிகப் பெரிய கண்கள் மற்றும் பெரிய உதடுகளை கொண்ட ஆசியர் என குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய மகன் உண்மையிலே மலேசிய முன்னாள் மன்னரின் குழந்தை என நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தி வந்த ஒக்ஸானா, முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்