அரைநிர்வாண நிலையில் மீட்கப்பட்ட காதலி: காதலனின் வெறிச்செயல்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
471Shares
471Shares
ibctamil.com

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துபாய் மாகாணத்தின் புறநகர் பகுதியில் இளம்பெண் ஒருவரது உடல் அரை நிர்வாண நிலையில் கிடப்பதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கொலை செய்யப்பட்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்பதும் அவரது காதலனேகுறித்த இளம்பெண்ணை கற்பழித்து பின்னர் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார், மேற்கொண்ட விசாரணையில், தாம் அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், ஆனால் கொலையில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த இளம்பெண்ணிற்கும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி உடற்கூறு சோதனையில் குறித்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபர் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணை தாம் காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவரை அவரது குடியிருப்பில் இருந்து கடத்தி வந்ததாகவும், பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த இளம்பெண் தம்முடனையே இருக்க அடம்பிடித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த விசாரணையின் முடிவில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்