விமான பயணிகளுக்கு இழப்பீடாக தங்கம்: முக்கிய வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

குவைத் நாட்டின் வதானியா விமான சேவை நிறுவன பயணிகளுக்கு இழப்பீடாக தங்கம் வழங்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நோக்கி பயணமான மூன்று பயணிகளுக்கே இழப்பீடாக தங்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இஸ்தான்புல் செல்ல குறித்த மூன்று பயணிகளும் குவைத்தின் வதானியா விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் விமானம் போதிய பயணிகள் பதிவு செய்யாததால் பயணத்தை ரத்து செய்துள்ளது. இதில் குறிப்பிட்ட 3 பயணிகளின் திட்டமிடப்பட்ட பயணம் முடங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மூவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மூவருக்கும் தலா 271.825 குவைத் தினார் அளவுக்கு தங்கம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

விமான சேவை நிறுவனங்கள் தாமதித்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு குவைத் நாடு மேற்கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers