பிறந்தநாள் பரிசாக தந்தை மகளுக்கு அளித்த லொட்டரி டிக்கெட்: எவ்வளவு பரிசு தெரியுமா?

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் 9 வயது சிறுமிக்கு பிறந்தநாள் பரிசாக தந்தை அளித்த லொட்டரி சீட்டில் மில்லியன் டொலர் வெற்றி பெற்றுள்ளார் அவர்.

இந்திய வம்சாவளி சிறுமியான இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வாங்கிய லோட்டரி சீட்டில் $268,000 மதிப்புள்ள McLaren Coupe காரை பரிசாக வென்றிருந்தார்.

கடந்த 19 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தின் துபாயில் எலிஸா மற்றும் அவரது பெற்றோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எலிஸாவின் 9-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை, லொட்டரி சீட்டு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

0333 என்ற அந்த சீட்டு எண்ணுக்கு தற்போது ஒரு மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

வாய்ப்பு அமையும்போதெல்லாம், எலிஸாவின் தந்தை லொட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் இதுவரை சொல்லிக்குள்ளும் அளவுக்கு பரிசு வென்றதில்லை. கடந்த இருமுறையாக மகள் எலிஸாவின் பெயரில் லொட்டரி சீட்டு வாங்கிய அவருக்கு பரிசு விழுந்துள்ளதை அவர் பெருமையாக கருதுகிறார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்