சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்... தவறு யார் மீது? ரஷ்ய வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக ரஷ்ய புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் தங்கள் வான்வெளியில் நுழைந்த அமெரிக்க ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, அவர்களின் விமானம் சர்வதேச வான்வெளியில் பறக்கும் போது ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம்சாட்டியது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்ய புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் ஈரானிய வான்வெளியில் பறந்ததாக ரஷ்ய பாதுகாப்பு குழுத்தலைவர் நிகோலே பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து, ஜெருசலேம் நாட்டில் அமெரிக்கா, ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிகோலே பட்ருஷேவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெருசலேத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் ஈரானிய வான்வெளியில் தான் இருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து எனக்கு தகவல் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers