ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்... 17 உளவாளிகள் அதிரடி கைது: மரண தண்டனை என அறிவிப்பு!

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கும் 17 உளவாளிகளில் ஒரு சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்களது நாட்டில் 17 "சிஐஏ உளவாளிகள்" அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் அமைச்சக அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர்கள் ஈரானின் முக்கியமான துறைகளில் ஊடுருவியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த கூற்றுகளுக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை. பாரசீக வளைகுடாவில் பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் வாஷிங்டன் புதிய, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த பின்னர் ஈரானுக்கும் முக்கியமாக அமெரிக்காவிற்கும் இடையிலான விரோதப் போக்கு அதிகரித்துள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னரே இந்த தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...