அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Meizu M6s கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
35Shares
35Shares
ibctamil.com

பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில் சில புதிய நிறுவனங்களும் அவற்றுக்கு போட்டியாக களமிறங்கி வருகின்றன.

இவற்றின் வரிசையில் Meizu M6s எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று அறிமுகமாகவுள்ளது.

5.7 அங்குல அளவுடையதும், 1440 x 720 Pixel Resolution உடையதுமான HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Samsung Exynos 7872 Processor காணப்படுகின்றது.

இக் கைப்பேசியானது பிரதான நினைவகமாக 3GB RAM உடையதாகவும், 32GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட இரு பதிப்புக்களாகவும் வெளிவரவுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட கைப்பேசியானது 155 டொலர்களாகவும், 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட கைப்பேசியானது 186 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்