சியோமி நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வெளியீடு : விரைவில் வெளியாகும் சியோமி Mi ஏ3

Report Print Kavitha in மொபைல்

சியோமி நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் Mi ஏ3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சியோமி இந்தியா ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதில் புதிய ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களிலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதை அந்த ட்விட்டர் பக்கத்தில் உணர்த்தியிருக்கிறது.

மேலும் சமீபத்தில் வெளியான விவரங்களில் M1906F9SH எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் FCC வலைத்தளத்தில் சான்று பெற்றது.

இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 அல்லது ஏ3 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இதில் Mi சிசி9 மற்றும் சிசி9இ போன்ற கேமரா அமைப்பு மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட இருப்பது உறுதியானது.

சியோமி தனது Mi சிசி9 மற்றும் சிசி9இ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால் Mi ஏ3 மற்றும் ஏ3 லைட் ஸ்மார்ட்போன்களும் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers