5G கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Xiaomi

Report Print Givitharan Givitharan in மொபைல்

குறைந்த விலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சீன நிறுவனமான Xiaomi விரைவில் 5G கைப்பேசிகளையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் புதிய 5G கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi K30 எனும் கைப்பேசியே குறித்த வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் ஏனைய 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளின் விலை உயர்வாக இருக்கும் நிலையில் குறைந்த விலையில் Xiaomi அறிமுகம் செய்யும் 5G கைப்பேசி பலத்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்