புத்தம் புதிய ஸ்டார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது LG

Report Print Givitharan Givitharan in மொபைல்

உலகத்தரம்வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனமானது விரைவில் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

LG Q61 எனும் குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் 2.3GHz octa core processor, பிரதான நினைவகமாக 4GB of RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதன் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 246 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்