ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனையான 100 ரூபாய் நோட்டு: அப்படி என்ன சிறப்பு?

Report Print Arbin Arbin in பணம்
90Shares
90Shares
lankasrimarket.com

‘786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டை தனியார் வர்த்தக நிறுவனம் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையம் வாயிலாக பொருட்களை விற்பனை செய்யும் ‘இபே’ நிறுவனம் மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித எண்ணாக கருதும் ‘786’ என்ற எண்ணுடன் முடியும் நூறு ரூபாய் நோட்டை விற்பனை செய்வதாக ‘இபே’ நிறுவனம் மூலம் சிலர் அறிவித்துள்ளனர்.

இந்த நூறு ரூபாய் நோட்டின் விலை ரூ.50 ஆயிரம். தபால் செலவுக்கு கூடுதலாக ரூ.90. மொத்தம் 50 ஆயிரத்து 90 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை செலுத்துபவர்களுக்கு இரு நாட்களில் அவர்களின் முகவரிக்கு ‘786’ என்று முடியும் நூறு ரூபாய் நோட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று ‘இபே’ நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 50 ரூபாய் நோட்டை ரூ.254-க்கும், 20 ரூபாய் நோட்டை ரூ.294-க்கும், 10 ரூபாய் நோட்டை ரூ.244-க்கும், 5 ரூபாய் நோட்டை ரூ.549-க்கும் விற்பனை செய்ய அதே நிறுவன பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையிலொ பொது மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி, அநியாய விற்பனையை வெளிப் படையாக செய்பவர்களுக்கும், ‘இபே’ நிறுவனத்துக்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் முகமது மைதீன் கூறும்போது, “786 என்பது ‘இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்’ என்ற வார்த்தை களின் எண்களுக்கான சுருக்கமா கும்.

இந்த எண்ணுக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொடர்பு இல்லை. இதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். பொதுமக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, அதை பணமாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கூறும்போது, “786 என்பது வெறும் எண் மட்டும்தான். இது புனித எண் என்பது தவறானது. இதை வைத்து மக்களிடம் பணம் பறிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments