பிங்க் நிறத்தில் ஜொலித்த துபாய் புர்ஜ் கலிபா நட்சத்திர ஹொட்டல்: காரணம் என்ன?

Report Print Maru Maru in ஏனைய நாடுகள்

துபாயின் அடையாளமாக விளங்கும் ஏழு நட்சத்திர ஹொட்டலான புர்ஜ் கலிபா முழுதும் திடீரென பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது.

இதைப்பார்த்து ஆச்சரியப்பட்டவர்களுக்கு கிடைத்த பதில் இன்னொரு ஆச்சரியமானது.

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி செய்யப்பட்டிருக்கிறதாம்.

இந்த அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை சமூக அக்கறையுள்ளவர்கள் எந்த விதத்திலாவது வெளிப்படுத்தினால்தான் விழிப்புணர்வும் மக்களை சென்றடையும்.

பல சமூக அமைப்புகள், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டப்போட்டி, மாரத்தான் என மக்களிடம் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இதற்காகத்தான் இது நடக்கிறது என அறிவிப்பதுண்டு.

அந்த வகையில், உலக அளவில் முக்கியமான ஒரு ஹொட்டலாக விளங்கும் புர்ஜ் கலிபாவில் செய்யப்பட்டிருக்கும் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக மக்களை சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பிங்க் நிற ஒளி அக்டோபர் 13 ம் திகதி ஏற்றப்பட்டது. இது அடுத்து இரண்டு நாட்களுக்கு இருக்கும். அதுபோல, இந்த மாதம் முழுவதுமாக அடுத்தடுத்த வாரத்திலும் அதே மூன்று நாட்களில் ஏற்றப்படும் என தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அந்த விஷயங்களுக்கு தொடர்புடைய நிறங்களை தேர்வுசெய்து, இதுபோல, பிரபலமான லேண்ட்மார்க் கட்டடங்களில் ஒளிரச்செய்தால், அது மக்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.

ஊடகங்களிலும் அது செய்தியாகும் அதன் மூலம் குறிப்பிட்ட அந்த விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். அவர்களை பாதுகாத்துக்கொள்ள வழி ஏற்படும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments