கடவுள் தான் மிகப் பெரியவர் என கத்திய நபர்: ஸ்பெயின் எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கடவுள் தான் மிகப் பெரியவர் என்று ஸ்பெயின் எல்லைக்குள் ஊடுறுவ முயன்றதால், பொலிசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அல்லாஹு அக்பர் மற்றும் கடவுள் தான் அனைவருக்கும் மிகச் சிறந்தவர் என்று கத்திக் கொண்டே வந்துள்ளார்.

நீலச்சட்டையும், வெள்ளை கால்சட்டையும் அணிந்த அந்த நபர், பொலிசாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய படி நடந்து வந்தார்.

அப்போது அவனுக்கு பின்னால் வந்த பொலிசார் ஒருவர் அவர் தலையை தாக்கினார்.

அதன் பின் அனைத்து பொலிசாரும் அவனை சுற்று வளைத்து கைது செய்தனர்.

அவனை கைதுசெய்யபட்டபோது பொலிசார் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகளை ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சர் Jaun Ignacia டுவிட்டரில் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers