26 இளம்பெண்களுடன் ஆபாச சேட்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்வீடனில் இணையதளம் வாயிலாக இளம்பெண்களுடன் ஆபாச சேட் மேற்கொண்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்வீடனின் Uppsala பகுதி அருகே தனியாக குடியிருந்து வருபவர் 41 வயதான Bjorn Samstrom. இவரே கடந்த 2 ஆண்டுகளாக கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகளில் குடியிருக்கும் மொத்தம் 26 இளம்வயது பெண்களுடன் ஆபாச சேட் மேற்கொண்டுள்ளார்.

இதுவரை குறித்த 26 இளம்பெண்களையும் நேரில் சந்தித்திராத Samstrom வெப்கேம் பயன்படுத்தி ஆபாச சேட் மேற்கொண்டுள்ளார்.

மேலும் குறித்த காட்சிகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு மேலும் மேலும் மிரட்டி குறித்த இளம்பெண்களை தமது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இணையம் வாயிலாக ஆபச சேட் மேற்கொண்ட நபர் ஒருவர் தண்டிக்கப்படுவது ஸ்வீடனில் இதுவே முதன் முறையாகும்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் இழப்பீடாக மொத்தம் 97,000 பவுண்ட்ஸ் தொகையை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samstrom மீதான வேறொரு பாலியல் வழக்கு தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவரது குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட காணொளியில் இருந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்வீடன் அதிகாரிகள் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட 18 இளம்பெண்களை அடையாளம் காணப்பட்டதாகவும், இன்னும் 9 பேரின் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers