சீனாவிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ட்ரோன் என்னும் சிறிய ரக உளவு விமானம், சீன வான்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து சீன ராணுவ அதிகாரி கூறுகையில், ‘இந்தியாவைச் சேர்ந்த ட்ரோன், அத்துமீறி சீன வான்பகுதியில் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு சீனா அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளதாகவும், கீழே விழுந்த ட்ரோனை சோதித்த சீன வீரர்கள், அது இந்தியாவில் இருந்து வந்ததாக கண்டறிந்ததாகவும் சீன நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், ட்ரோன் எந்த இடத்தில் விழுந்தது என்பது பற்றியும், எப்போது விழுந்தது என்பது பற்றியும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்