வாடிக்கையாளர்களுக்கு கேள்வி பட்டியலை அனுப்பிய உணவகம்: மன்னிப்பு கேட்ட அதிகாரி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
48Shares
48Shares
ibctamil.com

அமெரிக்க உணவகம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கேள்வியால், அந்த உணவகத்தின் இணையதள சேவையை சீனா முடக்கியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் JW marriot மரியாட் என்ற அமெரிக்க உணவகம் இயங்கி வருகிறது.

இந்த உணவகம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கேள்வி பட்டியல் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கான பட்டியலில், திபெத்தும் இடம்பெற்றிருந்தது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த சீன அரசு அந்த உணவகத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் சேவையை முடக்கியது.

ஏனெனில் சீனாவில் தன்னாட்சி பகுதியாக திபெத் பார்க்கப்படுகிறது, இதை தனி நாடு என்று குறிப்பிடுவதா என்பதன் காரணமாகவே சீன அரசு இந்த முடிவை செய்துள்ளது.

இதையடுத்து உணவகத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்னே சோரென்சன் சீன அரசிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்