பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 6-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்ய மொடல் ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க ஹொட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், முதுகெலும்பு உடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த மொடலை கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவின் வளர்ந்துவரும் பிரபல மொடலான Ekaterina Stetsyuk(22) ஒப்பந்த நிகழ்ச்சி தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் குறித்த மொடல் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் அந்த மொடலை உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மொடலை அவர் கத்தி காட்டி மிரட்டியுள்ளதுடன், ஆசைக்கு இணங்கும்படி நிர்பந்தித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு மொடல் Stetsyuk, தாம் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ஹொட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு முதுகெலும்பு உடைந்ததுடன் விலா எலும்புகள் சிலவும் உடைந்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த அமெரிக்க தொழிலதிபரை அழைத்து விசாரித்துள்ளது.

அதில், குறித்த ரஷ்ய மொடல் பாலியல் தொழிலாளி எனவும், தம்மை தாக்கியதால் தாம் உயிர் காத்துக் கொள்ள கத்தியை காட்டி மிரட்டியதாகவும் அவர் பொலிசில் தெரிவித்துள்ளார்.

பொலிசாரிடம் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மொடலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் இது பொய் குற்றச்சாட்டு எனவும், தமது மகள் ரஷ்யாவில் வளர்ந்து வரும் மொடல் எனவும், பொய் குற்றச்சாட்டால் தமது மகளை சிறையில் தள்ள துபாய் அரசு முயற்சிப்பதாகவும் அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் உண்மை நிரூபணமானால் பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கொலை முயற்சிக்காகவும் அந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்