ஊழலில் சிக்கிய கொரிய ஜனாதிபதி: பரபரப்பை ஏற்படுத்திய தீர்ப்பு

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

தென்கொரிய ஜனாதிபதியாக இருந்த பார்க் கியூன் ஹேவிற்கு ஊழல் குற்றச்சாட்டிற்காக 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதினாறு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து கடந்த 1978 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டநிலையில், தென்கொரிய ஜனாதிபதியான பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தென்கொரியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே இவர் மீது ஊழல் புகார்கள் குவியத் தொடங்கின. இதையடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் சுமார் 2கோடியே 30 லட்சம் வோன் ஊழல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க டாலர்களில் இதன் மதிப்பு 2கோடியே 10லட்சம் ஆகும்.

இவருக்கு இப்போது 24 வருட சிறை தண்டனையும் 1 கோடியே 80 வோன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நேரலையில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு தென்கொரியாவை தற்போது பரபரப்பாகியுள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்