பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி 20 வயது இளம் நடிகை சாதனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
174Shares
174Shares
lankasrimarket.com

உலகின் பணகாரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் அட்டைப்படத்தில் 20 வயதிலே இடம் பிடித்து, பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி இளம் நடிகை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருபவர், 20 வயதான இளம் நடிகை Kylie Jenner. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மட்டும் $100 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

இதை தவிர்த்து சினிமா துறையில் நடிப்பிற்கு வந்து மூன்று வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், $900 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.

இதன் காரணமாக உலகின் பணகாரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் அட்டைப்படத்தில் பெண் பில்லியரான Kylie Jenner இடம்பிடித்துள்ளார்.

இதன் மூலம், பேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்பெர்க் தனது 23 வைத்த சாதனையை முறியடித்து Kylie முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்