இணையத்தை ஆக்கிரமித்த ஒற்றைப் புகைப்படம்: அந்த மலை உச்சி காதலர்கள் யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மலை உச்சியில் காதலியிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய அந்த காதலர்கள் யார் என்பது அம்பலமாகியுள்ளது.

மலை உச்சியில் மலர்ந்த அந்த காதல் தொடர்பில் மிகத் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தை ஆக்கிரமித்திருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்ற புகைப்படக் கலைஞர் மேத்யூவ் டிப்பில் குறித்த புகைப்படத்தை பதிவு செய்த பின்னர் அந்த காதலர்களை தீவிரமாக தேடியுள்ளார்.

ஆனால் அவரால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை தேட முடியாமல் போனது. இந்த நிலையில் சமூக வலைதளத்தின் உதவியை நாடிய டிப்பிலின் கண்களுக்கே அவர்களின் புகைப்படமும் சிக்கியுள்ளது.

சார்லி பியர் மற்றும் அவரது வருங்கால மனைவி மெலிஸா என்பவர்களே அந்த இருவரும்.

உள்ளூர் பத்திரிகை ஒன்றின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோட்டமிட்டுக் கொண்டிருந்த சார்லி, தமது புகைப்படம் வைரலான கதை தெரியவந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்